உ
நான் தமிழை ஒரு பாடமாக கற்றது, பள்ளியில் ஐந்து ஆண்டுகள் மட்டுமே! கண்டிப்பாக அனேக பிழைகள் இருக்கும். எனினும் தாய் மொழியின் மீதுள்ள பற்றினாலும், அதை மறக்கக்கூடாது என்பதாலும் இதை எழுதுகிறேன்.
இரண்டாம் வகுப்பிலேயே 'வள்ளி கோமலவள்ளி' என்பதர்க்கு பதிலாக 'வல்லி கோமளவல்லி' என்று எழுதி முட்டை போட்டவன் நான். இது போன்ற பிழைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்! திருத்திக்கொள்கிறேன்.
விஷயத்திர்க்கு வருவோம்!
சில நாட்களாகவே நான் இந்த விஷயத்தை எனது நன்பர்களிடமும் மற்றும் சிலரிடமும் பகிர்ந்துகொன்டுவருகிறேன். நீங்களும் என்னை போல 'ழ' உச்சரிப்பில் கவணம் செலுத்துபவராக இருந்தால், நீங்களும் இதை கவணித்திருக்கக்கூடும். யோசித்தீர்களா ஏன் 'zha' என்று எழுதிகிறார்கள் என்று?
"தமிழ் சொர்க்களை ஆங்கிலத்தில் எழுதும் பொழுது, ழ எழுத்து வரும் இடங்களில் எதையாவது எழுதித்தானே ஆகவேண்டும்? 'z' எழுத்து உபயோகம் இல்லாமல் கிடந்தது. அதனால் அதை எடுத்துக்கொண்டிருப்பார்கள்!" என்று தான் மிக நாட்களாக எனக்கு நானே விடை அளித்துக்கொண்டேன். வேறு எவரும் இதை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்வார்கள் என்று எனக்கு தோன்றவுமில்லை. ஆதலால் இந்த வினாவை வேறெவரிடமும் எழுப்பவுமில்லை.
"இதற்க்கான காரணம் ஒரு வேளை இப்படி இருக்குமோ...." என்று ஒரு நாள் ஒரு யோசனை தோனிற்று. 'google' செய்த பொழுது பதில் கிடைக்கவில்லை என்பதால் இதை இங்கு பகிர்ந்துகொள்கிறேன்.
'ஸ்' என்பது ஆங்கிலத்தில் 'S' எழுத்தின் ஒலி.
அந்த 'S'உடன் 'h' சேர்த்தால் - 'Sh'. அதாவது - 'ஷ்'.
'ஸ்ஸ்ஸ்ஸ்' என்று பாம்புபோல் ஒலி எழுப்பியபடி, நாவை பின்னால் எடுத்துச்சென்றால் 'ஷ்ஷ்ஷ்ஷ்'ஐ வந்தடைவீர்கள்.
அதாவது, ஆங்கிலத்தில் சில எழுத்துக்களுடன் 'h' சேர்ப்பதால், நாக்கை பின் புரம் கொன்டுபோனால் ஏர்ப்படும் சப்தம் உருவாகிறது.
இது 'zha' விர்க்கும் பொருந்துகிறதா என்று பார்ப்போம். 'zzzz' என்ற ஒலியை எழுப்புங்கள். இதை செய்வதர்க்கு, 'buzz' / 'fizz' போன்ற வார்த்தைகளின் கடைசி எழுத்தை உச்சரித்தப்படி இருக்கவும். இப்போது நாவை பின் புறம் இழுத்தீர்களானால் வரும் 'ழ்' சப்தம்.
ஆஹா! 'zha' என்பது முற்றிலும் 'random' அல்ல!
வடக்கத்தியர்களுக்கு ஒரு வேளை இப்படி சொல்லிக்கொடுத்தால் 'ழ'வை உச்சரிக்க முடியுமோ என்னவோ! :)
நான் ஒரு வழியாக தமிழில் type செய்து முடித்துவிட்டேன்! நன்றி!
நான் ஒரு வழியாக தமிழில் ஒரு post படித்துவிட்டேன்! நன்றி!
ReplyDeleteஎன்னை மேலும் எழுத உக்குவித்ததர்க்கு நன்றி அவந்திகா! :)
ReplyDeleteMy blog has officially become trilingual :P
வடக்கத்தியர்களுக்கு சொல்லி தருகிறாயோ இல்லையோ, முதலில் திரு விஜய்காந்த் அவர்களுக்கு சொல்லி தற வேண்டும்! Leader of opposition, and he cannot say ழ, even if he wanted to save his life!
ReplyDeleteBTW brilliant post Jaichu, and amazing logic! :)
Ha ha ha.. Nice observation. I think that has got to do with madurai origin. So cant blame him. :)
ReplyDeleteThanks a lot for the complement and motivation!! :D
Ippadiyoru vilakkathai nan idhatku munnar kaetirukkavillai. Migachhariyana vilakkam, arivulla yosanai. Neengal solvadhu pola vadakkathiyargalukku 'zha'vai sollikkodukkavum idhu sulabamana vazhi. Vaazhththukkal. (sorry I don't know how to type in tamizh)
ReplyDeleteRamkmr, Nandri! :D
ReplyDeleteYou can use Baraha (http://www.baraha.com) to type in tamizh on Windows or use SCIM(https://help.ubuntu.com/community/SCIM) if you use Ubuntu/Linux.
Hope that helps :)